×

ரஷ்ய அதிபர் புதினுக்கு உடல் நல குறைவா?

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்றும் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல் வெளியாகி வந்தன. இந்நிலையில், அதிபர் புதினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தனது அறையில் இருந்தபோது ஏதோ ஒருவித சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர் என்றும், அப்போது புதின் தரையில் விழுந்து கிடந்தார் என்றும், அங்கிருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளை கொண்ட அறைக்கு புதினை டாக்டர்கள் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் புதின் சுய நினைவுக்கு திரும்பினார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே, புதின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

The post ரஷ்ய அதிபர் புதினுக்கு உடல் நல குறைவா? appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,Moscow ,Vladimir Putin ,
× RELATED 5ம் முறை அதிபரான பின் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் சீனா பயணம்